Pei Irukka Bayamen – Tamil Movie Review In Tamil

 Pei Irukka Bayamen – Tamil Movie Review In Tamil

பேய் இருக்க பயமேன் : புதுமுக இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்கி அவரே நாயகனாக நடித்திருக்கும் பேய்யை மையமாக கொண்ட கதைக்களம் தான் இந்த படம். படத்தின் கதை, நாயகனும்,நாயகியும் புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகள் இருவருக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. அடிக்கடி சண்டையிட்டு கொள்கிறார்கள்,தேனிலவுக்கு அவர்களுக்கு சொந்தமான மூணாறில் உள்ள ஒரு வீட்டுக்கு அங்கு பேய் இருப்பது தெரியாமல் சென்று தங்குகிறார்கள். தனியாக மாட்டிக்கொண்ட இருவரும் அந்த பேய்களிடம் மாட்டி கொண்டு படும் அவஸ்த்தைகளையும், புரிதல் இல்லாமல் இருக்கும் இருவரும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதையும் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் கார்த்தீஸ்வரன் படத்தின் பெரும்பாலான கதை இவரை சுற்றியே நகர்கிறது, இருந்தாலும் அதை ரசிகர்கள் ரசிக்கும் விதமாக நடித்து இருக்கிறார். படத்தின் நாயகி காயத்ரி புதுமுக நடிகை போல் தெரியாமல் நடித்திருக்கிறார். படத்தில் நெல்லை சிவா மற்றும் முத்துக்காளை மேலும் காமெடிக்கு உதவி செய்கிறார்கள். படத்தின் இசை கேட்கும் விதம் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவில் முன்னேற்றம் தேவை. மொத்தத்தில் குடும்பத்துடன் ஒருமுறை சென்று பார்க்கும் விதமாக ஆபாச காட்சிகள் இல்லாமல் எடுத்ததற்காக அவரை பாராட்டலாம்.

Related post