பென்சில் பட இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மரணம்… கவலையில் திரையுலகம்!

 பென்சில் பட இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மரணம்… கவலையில் திரையுலகம்!

ஜீ வி பிரகாஷ் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “பென்சில்”. இப்படத்தினை இயக்கியிருந்தார் மணி நாகராஜ்.

இவர் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இணையத்தில் பெரும் வைரலாகவும் பரவி வந்தது. இந்நிலையில், இயக்குனர் மணி நாகராஜுக்கு நேற்று (ஆக.25) சென்னையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார்.

இச்செய்தி திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page