அதீத எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிறது விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன் 2”!

 அதீத எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிறது விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன் 2”!

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி கண்ட படம் தான் “பிச்சைக்காரன்”.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “பிச்சைக்காரன் 2” படத்தினை எடுத்தார் விஜய் ஆண்டனி. இந்த படத்தினை விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்திருக்கிறார்.

பிச்சைக்காரன் திரைப்படமானது குடும்ப ரசிகர்களுக்கிடையே மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிச்சைக்காரன் 2 திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது படக்குழு.

இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் விஜய் ஆண்டனின் மிகப்பெரும் விபத்தை சந்தித்து உயிர் பிழைத்து வந்தார்.

அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுமா “பிச்சைக்காரன் 2”… காத்திருப்போம்.

Related post