பிஸ்தா திரைவிமர்சனம்

 பிஸ்தா திரைவிமர்சனம்

சிரிஷ், செந்தில், யோகி பாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், நமோ நாராயணா, லொள்ளு சபா சாமிநாதன் நடிப்பில், ரமேஷ் பாரதி இயக்கத்தில், ஒன் மேன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் “பிஸ்தா”. இப்படத்திற்கு தரேன் குமார் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம் அவரின் இசைப் பயணத்தில் “25வது படம்” ஆகும்.

கதைப்படி,

படத்தின் முதல் காட்டியே வித்தியாசம். ஹீரோ சிரிஷ்க்கு திருமணம் காலையில் நடக்கவுள்ள நிலையில், திருமண அழைப்பிதழ், பேனர் ரெடி, மண்டபம் முதல் மேளம் வரை அனைத்தும் தயாராக இருக்க மணப்பெண் யாரென்று ஆடியன்ஸுக்கு மட்டுலமல்லாது ஹீரோவுக்கே தெரியாது.

இவரின் திருமணம் நடந்து விடக்கூடாது என வில்லன் கோஷ்டி தடுக்க நினைக்கிறது. அவர்கள் தடுக்க நினைக்க என்ன காரணம்.? திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தான் ஹீரோவின் நண்பர்கள் பெண் தேட ஆரம்பிக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? அவருக்கு பெண் கிடைக்கவில்லையா? அப்படி என்றால் கல்யாண ஏற்பாட்டிற்கு என்ன காரணம்? என்று பார்த்தால், ஹீரோ செய்துக் கொண்டிருந்த வேலை தான் காரணம். அப்படி என்ன மாதிரியான வேலை செய்தார் ஹீரோ சிரிஷ்? என்ற பல கேள்விகளும் குழப்பங்களும் தான் படத்தின் கதை..

பெண்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்டாகவும் மெச்சூராகவும் இருக்கிறார் சிரிஷ். ஆனால் நடிப்பில் அமெச்சூரான நடிப்பே. ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் உணர்வுகள் போதவில்லை.

செந்தில், சதீஷ், யோகிபாபு, லொள்ளு சபா சாமிநாதன், ஞானசம்பந்தம் என பெரிய காமெடி நட்சத்திரங்கள் இருந்தும் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அதிலும் சதீஷின் காமெடி சகிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் கலாய்பதும், நகைச்சுவையாக பேசுவதும் தான் காமெடி. இப்போதும் அப்படி தான். ஆனால், சதீஷுக்கு அது தெரியாது போல. டபுள் மீனிங் வார்த்தைகளும் தரக்குறைவான வசனங்கள் பேசுவது தான் காமெடி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

படத்தில் நாயகி மிருதுளாவை விட அக்கா அருந்ததி அழகாகவும் அருமையாகவும் நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத ட்விஸ்ட்.

தரண் இசையில் உருவான 2 பாடல்கள் அருமை.

ரமேஷ் பாரதி இயக்கத்தில் பெயரளவில் இருக்கும் பிஸ்தா சுவையாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது பெரிய பிஸ்தா போல மாஸாக காட்டி இருக்கலாம். அதுவும் இந்த படத்தில் மிஸ்ஸிங்.

பிஸ்தா – தேவையான அளவிற்கு கூட இல்லை  – (2/5)

Related post