Pizhai – திரைப்படம் விமர்சனம்

பிழை – சிறுவயதில் நாம் அறியாமல் செய்யும் பிழை நம்மையும் நம் குடும்பத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. சிறுவயதில் ஊரில் வளரும் மூன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி திரிகின்றனர் . பெற்றோர்களின் கண்டிப்பு மற்றும் ஊரில் நண்பர்கள் யாரும் இவர்களுடன் பேசாததால் மூன்று பெரும் ஊரை விட்டு சென்னை வருகின்றனர் வந்த இடத்தில இவர்களின் நிலை என்னானது ? அவர்கள் மறுபடியும் பெற்றோர்களுடன் இணைந்தார்களா ? என்பது மீதி கதை.
படத்தில் பெற்றோர்களாக மைம் கோபி,சார்லி ,ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மூன்று பேரும் படத்திற்கு மிக பெரிய தூண்களாக இருக்கிறார்கள்.படத்தின் சிறுவர்களாக அப்பா நஸத்,காக்க முட்டை ரமேஷ் மற்றும் கோகுல் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை படத்திற்கு பாதி பலம் தான்.ஒளிப்பதிவு ஓகே. படத்தின் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா சொல்ல வந்த கதையில் டாக்குமெண்ட்ரி பீல் வருவதை தவிர்க்க முடியவில்லை. பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் ஒரு முறை சென்று இந்த பிழையை பார்க்கலாம்.