போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம் – 3/5

 போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம் – 3/5

இயக்கம்: மைக்கேல் ராஜா

நடிகர்கள்: விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா ஷங்கர், சார்லஸ் வினோத், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ்

ஒளிப்பதிவு: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்

இசை: எ ஆர் ரகுநந்தன்

படத்தொகுப்பு: தியாகராஜன்

தயாரிப்பாளர்: சிவா கிளாரி

கதைப்படி,

அமரர் ஊர்தியை ஓட்டும் ஓட்டுநராக வருகிறார் நாயகன் விமல். நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி மேரியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, இறந்தவர் ஒருவரின் உடலை எடுத்துக் கொண்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி பயணமாகிறார் விமல்.

இறந்தவரின் உடலை வாங்க திருநெல்வேலியில் இரு பிரிவினர் காத்திருக்கின்றனர். இறந்தவரின் மூத்த மனைவியின் வாரிசான ஆடுகளம் நரேன் ஒருபக்கம் இரண்டாவது மனைவியின் வாரிசான பவன் ஒருபக்கம்.

இந்நிலையில், உடலை எடுத்துச் செல்லும் வழியில் கருணாஸ் வழிப்போக்கனாக ஏறிக் கொள்கிறார். கருணாஸ் ஒரு கூத்து கட்டும் கலைஞர்.

தனது கலைக்கு ஒரு மரியாதை கிடைக்கவில்லை என்று வாழ்க்கையை வெறுத்துப் போனவர். விமலோடு அவரது அமரர் ஊர்தியில் பயணமாகிறார் கருணாஸ்.

மனைவியின் பிரசவத்திற்காக பணம் தேவை என்ற நெருக்கடியும் விமலுக்கு இருக்கிறது.

பணம் மற்றும் பிணம் என இரு பிரச்சனைக்கும் நடுவே விமலின் பயணம் செல்கிறது.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

சென்னை மொழியில் நடிகர் விமலின் பேச்சு, வழக்கமான படங்களை விட மாறுபட்டு இருந்தது, அது ரசிக்கும்படியாக இருந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லையே என நிர்கதியாக நிற்கும் தருணத்தில் நடிகர் விமல் நடிப்பால் நம் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விட்டார்.

கருணாஸை இப்படத்தில் இரண்டாவது ஹீரோ என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு நடிப்பைக் கொடுத்து கைதட்டல் பெறுகிறார் கருணாஸ். தான் ஒரு கூத்து கலைஞராக நடித்திருக்கிறார் என்று சொல்வதைக் காட்டிலும், அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு நடிப்பை கொடுத்திருக்கிறார் கருணாஸ்.

அடுத்து என்ன நடக்கும் என சீட்டின் நுனியில் படம் பார்ப்பவர்களை அமர வைத்துவிட்டார் இயக்குனர்.

ஒவ்வொரு காட்சியையும் அளவாக எடுத்து அதை அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே பலம் தான் படத்திற்கு. க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் சற்று மெனக்கெடல் செய்து படமாக்கியிருக்கலாம்.

மற்றபடி,

போகுமிடம் வெகுதூரமில்லை – வலி நிறைந்த பயணம்

Related post