Ponmagal Vandhal – திரைப்படம் விமர்சனம்

 Ponmagal Vandhal – திரைப்படம் விமர்சனம்

பொன்மகள் வந்தாள் – இந்த கொரோனா காலகட்டத்தில் முதல் முறையாக வெளிவந்திருக்கும் தமிழ் திரைப்படம் இந்த படம். இந்த படத்தை துணிந்து வெளியிட்டதற்கு சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு பாராட்டுக்கள்.படத்தின் கதை 2004ம் ஆண்டில் 10 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கடத்தி கொலை செய்யப்படுகிறார்கள்,அதற்கு காரணம் சைக்கோ கொலைகாரி என அழைக்கப்படும் ஜோதி என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து அவரை என்கவுண்டரில் கொலை செய்கிறார்கள்.அத்துடன் அந்த வழக்கு முடிந்து விட்ட நிலையில் 15 வருடங்கள் கழித்து அந்த வழக்கை கையில் எடுக்கும் நாயகி ஜோதிகாவும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது தந்தை பாக்கியராஜும். அவர்கள் இந்த வழக்கில் மறைந்திருக்கும் வெளியுலகிற்கு தெரியாத பல உண்மைகளை பல சுவாரசியமான திருப்பங்களுடன் கொண்டு வருகிறார்கள்,அவர்கள் இந்த வழக்கில் ஜெய்த்தார்களா இல்லையா ? என்பது மீதி கதை.

படத்தின் நாயகன் மற்றும் நாயகி இரண்டுமே ஜோதிகா தான்,ஒவ்வொரு காட்சியில் வரும்போதும் நடிப்பால் நம்மை ஆட்கொள்கிறார்.படத்தின் ஆழத்தை உணர்ந்து நேர்த்தியாக கதாபாத்திரத்தை கையாள்கிறார். படத்தின் மற்றோரு பலமே தேர்ந்த நடிகர்களை தேர்வு செய்திருப்பது, பார்த்திபன்,பாக்கியராஜ் ,பிரதாப் போத்தன்,தியாகராஜன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் கதையில் ஒன்றி படத்திற்கு உதவி செய்கிறார்கள்.படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளின் ஆழத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது. படத்தின் பாடல்கள் மற்றும் மற்றும் பின்னணி இசை படத்தின் உயிரோட்டம். படத்தின் இயக்குனர் பிரெட்ரிக் எடுத்த கதையில் ஒரு ஆழமான திரைக்கதையும் அதற்கேற்ற காட்சியமைப்புகளும் அமைத்து படத்தை நகர்த்தி வெற்றி பெறுகிறார்.

 

Related post