வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்-1

 வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்-1

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக, நாவல் மற்றும் உண்மைக்கதைகளை வைத்து பலப்படங்கள் உருவாகி தக்க வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வரிசையில் 3 தலைமுறை நடிகர்களின் கனவு நாவல் கதையான பொன்னியின் செல்வன் (பாகம் -1) மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி இந்த வார ரீலீசுக்கு தயாராக உள்ளது.

கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ரஹ்மான், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, திரிஷா, சோபிதா மற்றும் பல நட்சத்திர நடிகர்களின் நடிப்பில். கமல் ஹாசனின் நரேஷனில் தயாராகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மக்கள் மத்தியில் அதீத வரவேற்ப்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப் படுகிறது.

புக்கிங்:
வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன்பதிவு இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த நிலையில். புக்கிங்கில் தெறிக்கவிட்டு வருகிறது. பல திரையரங்குகள் ஹவுஸ் புல்லாகிவிட்டன.

மேலும், யூ.எஸ்.ஏ வில் நிச்சயம் இப்படம் வசூல் சாதனை படைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளதோடு இந்தியாவில் பொன்னியின் செல்வன் வசூல் வேட்டை ஆடிவருகிறது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ப்ரீ-புக்கிங்கில் செயலிகளே கிராஷ் ஆகும் அளவிற்கு வரவேற்புள்ள இப்படம். முதல் நாள் வசூலாக ரூபாய்.100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ள இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் (2.0) படத்தின் வசூலை முறியடித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படத்தின் பட்டியலில் முதல் படமாக இருக்குமா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related post