பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்; இவ்ளோ தானா.?

 பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்; இவ்ளோ தானா.?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் குவித்திருந்தது. அப்பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமானது கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்தது.

முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதாலும், கல்கியின் புத்தகத்தில் இருந்ததை சற்று மாற்றி படமாக்கியிருந்த காரணத்தினாலும் பெரிதான வெற்றியை இரண்டாம் பாகம் தறாமல் சென்று விட்டது.

இதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் பெரிதாக சோபிக்க முடியாமல் போனது..

இதனால், 337 கோடி ரூபாய் மட்டுமே இரண்டாம் பாகம் வசூல் செய்திருந்தது.

 

Spread the love

Related post