பொன்னியின் செல்வன் 2; வேலையை ஆரம்பிக்க தயாரான மணிரத்னம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் லைகா நிறுவன்ம் தயாரிக்க உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
படம் வெளியான மூன்றே தினங்களில் இதுவரை சுமார் ரூபாய் 200 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடப்படும்ம் என இயக்குனர் மணிரத்னம் அறிவித்திருந்தார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அடுத்த வாரம் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை இயக்குனர் மணிரத்னம் தொடங்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.