ஜூலை 31ல் வெளிவருகிறது “பொன்னியின் செல்வன்” முதல் பாடல்!

 ஜூலை 31ல் வெளிவருகிறது “பொன்னியின் செல்வன்” முதல் பாடல்!

கல்கியின் “பொன்னியின் செல்வன்” திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இதன் முதல் பாகம் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவி வர்மன்.

இப்படத்தின், பொன்னி நதி என துவங்கும் பாடலை வரும் ஜூலை 31ல் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

Related post