இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல்… சாதனை படைத்த பொன்னியின் செல்வன்!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகி கடந்த வெள்ளியன்று ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது இப்படம். தொடர்ந்து திரையரங்குகளில் குடும்ப ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் முதல்நாள் வசூல் மட்டும் சுமார் ரூ. 80 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இரண்டாவது நாளில் சுமார் 73 கோடி ரூபாய் வசூலையும் வாரிக்குவித்துள்ளது. இரண்டே நாட்களில் மட்டும் 153 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.
தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் வசூல் இன்னமும் அதிகரிக்கும் எனவும் தெரிகிறது. இதனால், படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.