2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டு வருகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 படத்தின் வசூல் சாதனையும் முறியடித்தது.

அமெரிக்காவில் 2.0 திரைப்படம் $5.50 M வசூல் செய்தது. அந்த வசூலை கடந்து 2.0 படத்தின் சாதனை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Related post