ஒரே மேடையில் ரஜினி, கமல்… அதிரப்போகும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா!

 ஒரே மேடையில் ரஜினி, கமல்… அதிரப்போகும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”.

இந்த படத்தை லை நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில், பல நட்சத்திரங்கள் விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியும் இவ்விழாவில் நடைபெறவிருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் இவ்விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

செப்டம்பர் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related post