தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.? பொறி கிளப்பும் பொன்னியின் செல்வன்!!

லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம்.
படம் வெளியானது முதல் நல்லதொரு வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளாது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடத்தில் பீஸ்ட், வலிமை, கேஜி எப் 2, விக்ரம் படங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை தட்டிச் சென்றது பொன்னியின் செல்வன்..