இன்று மாலை பல பிரபலங்கள் வெளியிடும் “பொன்னியின் செல்வன் 1” டீசர்!
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன் 1”.
இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸோடு இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டீசரை அந்தந்த மொழிகளில் அந்த மொழிகளின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெளியிடுகிறார்கள்.
தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும், ஹிந்தியில் அமிதாப் பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிடுகிறார்கள்.
இன்று மாலை 6 மணியளவில் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.