ஹாய் செல்லங்களா….. ரசிகர்களை உற்சாகப்படுத்திய அந்த போட்டோ!

 ஹாய் செல்லங்களா….. ரசிகர்களை உற்சாகப்படுத்திய அந்த போட்டோ!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தளபதி 66”. இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க பேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகும் இப்படம், தமிழின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர்.

ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

‘ஹாய் செல்லங்களா! நாங்கள் இருவரும் தளபதி 66-இல் இணைத்துள்ளோம்’ என கேப்ஷன் கொடுத்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த படம் தற்போது அதிகளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. கில்லி, ஆதி, சிவகாசி, போக்கிரி மற்றும் வில்லு ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

Related post