கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்ற “RRR”;பிரதமர் வாழ்த்து!

 கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்ற “RRR”;பிரதமர் வாழ்த்து!

எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படம் தான் “RRR”. இத்திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது.

இப்படத்தில் எம். கீரவாணி இசையமைத்து, சந்திரபோஸ் எழுதிய “நாட்டுக் கூத்து” என்ற பாடலை பாடகா்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்ளிகஞ்ச் பாடினா். பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்திருந்தார். துடிப்பான இசை, துள்ளலான நடனம் என இந்தப் பாடல் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 80-ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகை ஜென்னா ஆா்டேகா சிறந்த பாடலுக்கான விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அறிவித்தாா். படக் குழுவினருடன் விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளா் கீரவாணி, ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்று கொண்டாா். அப்போது, அவா் பேசுகையில், இந்த விருதுக்கு முழுக் காரணமான இயக்குநா் ராஜமௌலிக்கு, அவரின் கனவுக்கு நன்றி எனக் குறிப்பிட்டாா்.

கோல்டன் குளோப் விருதினை பெற்றதற்காக பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

Related post