கே ஜி எஃப் பட நிறுவனத்தோடு கைகோர்த்த பிரித்விராஜ்!

 கே ஜி எஃப் பட நிறுவனத்தோடு கைகோர்த்த பிரித்விராஜ்!
Digiqole ad

மொழி, அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகர் பிரித்விராஜ்.

மலையாள திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் பிரித்வி ராஜ், மோகன்லாலை வைத்து லூசிஃபர் என்ற படத்தை இயக்கினர்.

ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கொண்டாடும் அளவிற்கு லூசிபர் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து, ‘எம்புரான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரித்விராஜ்.

இப்படத்திற்கு பிறகு, ‘டைசன்’ என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘லூசிஃபர்’ படத்தின் திரைக்கதையை எழுதிய முரளி கோபி எழுதியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி என பான் இந்தியா படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களை பிரம்மாண்டமாகத் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த வருடம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

Digiqole ad
Spread the love

Related post