சர்ச்சைக்குரிய வசனம்; மன்னிப்புக்கோரிய பிருத்விராஜ்!

 சர்ச்சைக்குரிய வசனம்; மன்னிப்புக்கோரிய பிருத்விராஜ்!
Digiqole ad

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ், விவேக் ஓப்ராய் மற்றும் சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெ்ளியான திரைப்படம் தான் “கடுவா”.

இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளை காயப்படுத்தும் விதமாக வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதால், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மற்றும் பல பிரபலங்களும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயக்குநர் ஷாஜி கைலாஷ், தயாரிப்பாளர்கள் லிஸ்டின் ஸ்டீபன், சுப்ரியா மேனன் ஆகியோருக்கு கேரள மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து, இயக்குனர் ஷாஜி கைலாஷும் நடிகர் பிருத்விராஜும் மன்னிப்பு கேட்டுள்ளனர். ”படத்தில் இடம்பெற்றுள்ள அந்த வசனம், வில்லனின் கொடுமையை நம்ப வைப்பதற்காகவே சேர்க்கப்பட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று முகநூலில் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார். இதை பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Digiqole ad
Spread the love

Related post