முரளி இராமநாராயணுக்கு எதிராக களமிறங்கும் புதிய அணி

 முரளி இராமநாராயணுக்கு எதிராக களமிறங்கும் புதிய அணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது.

அதற்காக ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் ” உரிமைக் காக்கும் அணி ” என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் மன்னன் தலைமையில் ஒரு அணியும் என இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை புரியவிருக்கின்றனர்.

மன்னன் தலைமையிலான அணியில் கமீலா நாசர், ஜே எஸ் கே சதீஷ்குமார், தேனப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளனர்.

விரைவில் இரு அணிகளும் தங்களுக்கான ஓட்டு வேட்டையில் களமிறங்கவிருக்கின்றனர்.

 

Related post