அஜித்திற்கு பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் மரணம்!

 அஜித்திற்கு பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் மரணம்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக வலம் வந்தவர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி.

இவர் தயாரிப்பில் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன் ஆஞ்சநேயா, ஜி, வரலாறு உள்ளிட்ட படங்களில் அஜித் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் விக்ரமின் காதல் சடுகுடு, சிம்புவின் வாலு, ரேணிகுண்டா, 18 வயசு உள்ளிட்ட படங்களையும் இவர் தயாரித்திருந்தார்.

சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டவர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி.

கடந்த 8 மாத காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று இரவு காலமானார்.

இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related post