சீக்கிரமாவே புதுப்பேட்டை 2 வரும்; செல்வராகவன் கொடுத்த அப்டேட்!

 சீக்கிரமாவே புதுப்பேட்டை 2 வரும்; செல்வராகவன் கொடுத்த அப்டேட்!
Digiqole ad

சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத காவியமாக இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படங்களின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் வெகுவாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட செல்வராகவன், “ சீக்கிரமாகவே புதுப்பேட்டை 2 ஆரம்பிக்க போகிறேன். அதற்கு அடுத்தபடியாக தான் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ஆரம்பிப்பேன்.’ என்று கூறியுள்ளார்.

தனுஷை வைத்து தான் இரண்டு படங்களையும் செல்வராகவன் திட்டமிட்டிருக்கிறார்.

 

Digiqole ad
Spread the love

Related post