ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தனுஷின் “ராயன்”

 ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தனுஷின் “ராயன்”

தனுஷ் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “ராயன்”. இப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் மீதி அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே டிக்கெட் அதிகளவில் விற்றுத் தீர்ந்துள்ளது.

ரசிகர்கள் இதனை இணையத்தில் பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்.

 

Related post