ரிலீஸ் தேதி குறித்த ராயன்… எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்!

 ரிலீஸ் தேதி குறித்த ராயன்… எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் படம் தான் ராயன். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சுந்தீப், துஷாரா, வரலக்‌ஷ்மி, அபர்ணா, காளிதாஸ் மற்றும் அனிகா நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது..

இந்நிலையில், படத்தினை அடுத்த மாதம் 26ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டு, அதிகாரப்பூர்வமாகவும் அதை அறிவித்திருக்கிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

 

Related post