திருவிழாவாக மாறிய திரையரங்குகள்… ராயனை கொண்டாடும் ரசிகர்கள்!
தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் படம் தான் “ராயன்”. உலகம் முழுவதும் நேற்றைய தினம் இப்படம் திரைக்கு வந்தது.
படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், எதிர்பார்ப்பினை 100 சதவீதம் பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார் இயக்குனரான தனுஷ்.
மாஸ் காட்சிகள், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து கோணங்களிலும் தனுஷ் தாறுமாறாக இறங்கி அடித்திருப்பதால், படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நேற்று படத்தினை வெளியிட்ட திரையரங்குகள் அனைத்தும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிய நிலையில், இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
இன்று பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியிட்ட திரையரங்குகள் மக்களின் கூட்டத்தால் திருவிழாவாக மாறியிருப்பதை காண முடிகிறது.
தனுஷின் இயக்கம், ஏ ஆர் ரகுமானின் இசை, ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.