கமல் நடிகன்யா.. அதான் “விக்ரம்” ஓடியிருக்கு – “டைட்டில்” பட விழாவில் ராதாரவி பேச்சு!
டில்லி பாபு தயாரிப்பில் விஜித் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “டைட்டில்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் ராதாரவி, பாக்யராஜ், பேரரசு, ஆர் கே சுரேஷ், மைம் கோபி, ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அப்போது பேசிய ராதாரவி, “விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் அந்தந்த படத்தின் ப்ரொமோஷனுக்கு வர வேண்டும்.
சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது. கமல் நடிகன், ஜெயிச்சிட்டாரு. சன் டிவி பெரிய நிறுவனம், அதனால் அவங்க எடுத்த திருச்சிற்றம்பலம் நல்லா ஓடுது. ஒவ்வொரு நிமிஷத்துக்கும் விளம்பரம் போட்டுகிட்டு இருக்காங்க.
படத்தின் பாடல், ட்ரெய்லர் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு. கண்டிப்பா இந்த “டைட்டில்” படம் வெற்றி பெறும்.
படத்தின் நாயகன் விஜித்தின் அப்பா எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும். நானும் அவரும் கல்லூரி நண்பர்கள். அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.