பீல் குட் பட இயக்குனருடன் இணையும் யோகி பாபு

 பீல் குட் பட இயக்குனருடன் இணையும் யோகி பாபு

மொழி, அபியும் நானும், காற்றின் மொழி என பல பீல் குட் படங்களை இயக்கி தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் ராதா மோகன்.

இதுமட்டுமல்லாமல், பயணம், 60 வயது மாநிறம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இவர். அடுத்த பீல்குட் கதையோடு நடிகர் யோகி பாபுவுடன் இணையவுள்ளாராம்.

சமீபகாலத்தில் வெளியாகும் 80 சதவீத படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் மக்களை கவர்ந்து வரும் நடிகர் தான் யோகி பாபு. காலையில் ஒரு படம், மாலையில் ஒரு படம் என நாள் ஒன்றுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் யோகிபாபு.

என்னதான் இவர் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வந்தாலும், ஹீரோவாக இவர் நடிக்கும் படங்கள் தனித்துவமான ஒரு கதையையே கொண்டிருக்கும்.

அதற்கு சான்று இவர் நடிப்பில் வெளியான, மண்டேலா மற்றும் பொம்மை நாயகி திரைப்படங்கள் தான்.

அந்த வகையில், இயக்குனர் ராதா மோஹனுடன் இவர் இணையும் படமும் மக்களுக்கு பீல் குட் படமாக அமையும் என்றும், அந்த படத்திற்காக கிட்டத்தட்ட 45 நாட்கள் கால்ஷீட் யோகி பாபு வழங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Related post