ராஜாமகள் விமர்சனம்

முருகதாஸ், பக்ஸ், ஃப்ராங்க்ளின், ப்ரிதிக்ஷா நடிப்பில் ஹென்றி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “ராஜா மகள்”.
எதை பேசுகிறது இப்படம்?
8 வயது பெண்குழந்தைக்கும், தந்தைக்கும் இடையேயான ஒரு பாச போராட்டத்தை காட்டுகிறது இப்படம்.
கதைப்படி,
ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து சென்னையில் வாடகைக்கு குடி இருப்பவர் தான் முருகதாஸ். இவரின் மனைவி தான் வெலினா. இவர்களின் 8 வயது மகள் தான் ப்ரதிக்ஷா.
பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வரும் முருகதாஸ், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை கவனித்து வருகிறார். மகள் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கும் முருகதாஸ், தன் மகள் எதைக் கேட்டாலும் அதை முடியாது எனக் கூறாமல் உடனே வாங்கித் தந்து விடுகிறார்.
அப்போது ஒருநாள், தன்னுடன் படிக்கும் நண்பனின் வீட்டிற்கு செல்கிறாள் ப்ரதிக்ஷா. அவரின் வீட்டை கண்டு வியப்படையும் ப்ரதிக்ஷா.. அப்பாவிடம் தனக்கு ஒரு வீடு வாங்கி தருமாறு கேட்கிறாள்.
அப்பாவும் இப்போது அப்போது என சமாளித்துக்கொண்டு வர ஒரு கட்டத்திற்கு மேல் அவரின் இயலாமையால் மகளிடம் பேசுவதையும் பார்ப்பதையும் தவிர்க்கிறார். திடீரென ஒருநாள் மயக்கமடையும் ப்ரதிக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை காண வரும் தந்தையிடம் “வீடு வாங்கிட்டியா பா”
ப்ரதிக்ஷாவின் கனவு நிறைவேறியதா.? முடியாது என்று ஒருநாளும் கூறாத தந்தை, தனது மகளின் ஆசையை நிறைவேற்றினாரா.?? என்பது படத்தின் மீதிக் கதை.
மகளின் மீதி அதீத அன்பு கொண்ட தந்தையாகவும், தான் பட்ட துன்பத்தை மகள் படக்கூடாது என்ற எண்ணம் கொண்ட தந்தையாக நம் மனதில் நின்றிருக்கிறார் முருகதாஸ்.
இண்டர்வல் காட்சிக்கு முன் வரும் “தனது வறுமையை மகளிடம் சொல்ல முடியாமலும், மகளை பார்க்காமலும் அவர் தவிக்கும்” மற்றும், “பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் மகளை அவளுக்கு தெரியாமல் கண்டு மகிழ்ந்தும். அவரை நெருங்கி உடன் இருக்க முடியவில்லையே என்று பரிதவிக்கும்” காட்சிகளில் கை தட்டி, விசில் அடித்தே அவரை கொண்டாடலாம்.
படத்தின் முக்கிய பலம் ப்ரதிக்ஷா தான். நம் பக்கத்து வீட்டு பிள்ளையை பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்துவிட்டால் அந்த சிறுமி. அவர் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். தனி பாராட்டுக்கள் ப்ரதிக்ஷாவுக்கு.
கன்னிமாடம் படத்தில் அனைவரின் பாராட்டைப் பெற்ற ஹீரோயின் வெலினா, இப்படத்திலும் ஒரு குடும்பப் பெண்ணாக வந்து தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
கொடுக்க பட்ட பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் பக்ஸ்.
தன் குழந்தைக்காக என்ன வேண்டுமானாலும் யோசிக்காமல் செய்யும் தந்தை, தந்தையின் மீது அளவில்லா பாசத்தை கொண்ட மகள். மிடில் க்ளாஸ் பேமிலி. சொந்த வீடு வாங்க ஆசை கொண்ட ஒரு சாமானிய வாழ்க்கை என படத்துடன் நம்மை இணைத்துக்கொள்ளும் அதனை சாராம்சங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஹென்றி.
ராஜாமகள் – பாராட்டுக்குரியவள் – (3/5)