Rajavamasam : திரைப்படம் விமர்சனம்

ராஜவம்சம் கூட்டு குடும்பத்தின் மகிமையை போற்றும் மற்றுமொரு திரைப்படம். சசிகுமார், விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர், இயக்குனர் KV கதிர்வேலு இயக்கியுள்ளார். படத்தின் கதை, சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் சசிகுமார்,அந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக இருந்து காப்பாற்றுகிறார். ஊரில் மிக பெரிய குடும்பமாக இருக்கும் இவருக்கு அந்த கூட்டு குடும்பம் என்பதாலேயே திருமணம் பலமுறை தடைபடுகிறது. ஒரு கட்டத்தில் திருமணம் நிச்சயம் ஆக அந்த பெண்ணோ நேராக சசிகுமாரின் வந்து தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி தருகிறார்.அந்த கல்யாணத்தை நிறுத்த தன்னுடன் வேலை பார்க்கும் நிக்கி கள்ரானியை தன் காதலியாக நடிக்க கூட்டி செல்கிறார். அங்கு செல்லும் அவருக்கு வேலை பார்க்கும் இடத்தில் மிக பெரிய நெருக்கடி வருகிறது, அதுமட்டுமில்லாமல் நிக்கி கல்ராணி தனக்கு அதிக பணம் வேண்டும் என்று அடம்பிடிகிரார். இதையெல்லாம் அவர் எப்படி சமாளித்தார் என்பது மீதி கதை.
சசிகுமார் முதல் முறையாக ஒரு ஐடியில் வேலை பார்க்கும் இளைஞராக வருகிறார். படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். ஆனால் அந்த அறிவுரை வசனங்கள் இன்னும் மாறவில்லை. விஜயகுமார் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்துள்ளார். தன் மருமகன் கல்யாணம் நடந்தால் தான் தனக்கு கல்யாணம் என்று சுற்றி திரியும் தம்பி ராமையா,யோகி பாபு உள்ளிட்டோரின் காமெடி அப்பப்போ கலகலக்க செய்கிறது. நிக்கி கல்ராணி அழக. படத்தின் இசை சாம் cs முதல் முறையாக ஒரு கிராமத்து பின்னணியில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. படத்தின் இயக்குனர் கூட்டு குடும்பத்தின் அருமையை நன்றாக காட்டியுள்ளார் ஆனால் திரைக்கதையில் இருக்கும் சில சொதபல்களை தவிர்திருந்தல் இன்னும் நல்ல குடும்ப படமாக இருந்திருக்கும்.