மும்பை தாதாவாக ரஜினி!?

 மும்பை தாதாவாக ரஜினி!?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த படைப்பாக மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதற்கான படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில், ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மும்பை தாதாவாக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நேற்று முன் தினம் இணையத்தில் ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியாகி பெரும் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related post