இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினி… ஒரு ஸ்வாரஸ்ய சம்பம்!

 இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினி… ஒரு ஸ்வாரஸ்ய சம்பம்!

இளையராஜாவின் பாடல் & ரஜினியின் நடிப்பு, இந்த இரண்டும் ஒன்று சேரும் போது அதற்கு மயங்காத மனங்கள் மிகவும் குறைவு தான். அப்படி இருவரும் பல ஹிட் பாடல்களை ஒலியிலும் ஒளியிலும் கொடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம். அதுபோல், சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார்.

‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த்.

இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார்.

இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Related post