“ஜெயிலர்” படத்திற்கு ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா.?
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாக இருக்கும் படம் தான் “ஜெயிலர்”.
இப்படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில்,இதன் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் படக்குழுவினர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
இந்நிலையில், ரஜினி இப்படத்திற்காக சுமார் 151 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருக்கிறார் என்ற செய்தி கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் இவ்வளவு தொகை சம்பளமாக பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.