அஜித்துக்கு 3, ரஜினிக்கு 2 ; அடுத்தடுத்து அதிரடி காட்டும் லைகா நிறுவனம்!!

 அஜித்துக்கு 3, ரஜினிக்கு 2 ; அடுத்தடுத்து அதிரடி காட்டும் லைகா நிறுவனம்!!

அஜித் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் புதிதாக ஒரு படம் தயாரிக்க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்…

இச்செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை தொடர்ந்து அஜித் லைகா நிறுவனத்திற்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.

தற்போது நடித்து வரும் ஜெயிலர் படம் முடிந்ததும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் ஒரு படம் என ரஜினியும் இரண்டு படங்கள் லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளாராம்..

இது தவிர பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் லைக்கா நிறுவனம்..

 

Related post