விரைவில் இணையும் ரஜினி & கமல்.? 1000 கோடி வசூலுக்கு திட்டம்.!

 விரைவில் இணையும் ரஜினி & கமல்.? 1000 கோடி வசூலுக்கு திட்டம்.!

கமல்ஹாசன் நடித்து தயாரித்து வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. 500 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்தது இப்படம்.

இப்படத்தின் வசூலால் மிகுந்த உற்சாகமடைந்த கமல்ஹாசன், தயாரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இதனால், கமல் நடிப்பில் ஒரு படம், சிவகார்த்திகேயனோடு ஒரு படம், என அடுத்தடுத்து தனது நிறுவம் மூலம் பல படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்.

விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒரு பிரம்மாண்டமான படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் கமல்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறதாம் ராஜ்கமல் நிறுவனம்.

இப்படத்தின் மூலம் சுமார் குறைந்தது 1000 கோடி ரூபாய் வசூலை குவிக்க திட்டமிட்டிருக்கிறாராம் கமல்.

 

Related post