ரஜினி – லோகேஷ் கூட்டணி உறுதி… அடித்து கூறிய இயக்குனர்!

 ரஜினி – லோகேஷ் கூட்டணி உறுதி… அடித்து கூறிய இயக்குனர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “லியோ”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக தற்போது வலம் வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்த படம் யாரோடு என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருக்கிறார். ஜெயிலர் படத்தினை முடித்ததும் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

இந்த படத்தை முடித்து, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி வந்தது. இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் உறுதிபடுத்தியுள்ளார்.

 

Related post