இயக்குனர் N.லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்னேனி நடிக்கும் ‘The Warriorr’  ‘தி வாரியர்’

 இயக்குனர் N.லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்னேனி நடிக்கும் ‘The Warriorr’  ‘தி வாரியர்’

நடிகர் ராம் பொதினேனி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. 

#Rapo19 என தற்காலிகமாக அழைக்கப்பட்டிருந்த இப்படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ‘தி வாரியர்’ என்று இப்படத்திற்கு தலைபிடப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் தி வாரியர்’ படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் பவன்குமார் வழங்கும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், இசை – DSP,  சண்டைப்பயிற்சி – அன்பறிவ், படத்தொகுப்பு – நவீன் நூலி, வசனம் – Sai Mathav Burra, Brinda Sarathy.

Spread the love

Related post

You cannot copy content of this page