அஜித்தின் துணிவு படத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

 அஜித்தின் துணிவு படத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

நடிகர் அஜித்துடன மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து எச் வினோத் இயக்கி வரும் திரைப்படம் தான் ‘துணிவு’. போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் வியாபாரம் துவங்கி உள்ள நிலையில் படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது திட்டமிட்டுள்ளது..

இந்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரும் விநியோக நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணிவு படத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

 

Related post