விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்!

 விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்!

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டது.

படம் வெளியாகி 12 நாட்களுக்கு மேலாகியும் அரங்குகளில் இன்னமும் கூட்டம் குறையாது, ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.

அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டை விக்ரம் படம் முறியடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூட தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கார்த்தி நடிக்க பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்தார் படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ்நாடு வெளியிடும் உரிமையை உதயநிதி கைப்பற்றியுள்ளார்.

தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Related post