ஹாலிவுட் தரத்தில் வரவிருக்கும் அரவிந்த் சாமியின் ” கள்ளபார்ட் ” மே மாதம் வெளியாகிறது.

 ஹாலிவுட் தரத்தில் வரவிருக்கும் அரவிந்த் சாமியின் ” கள்ளபார்ட் ” மே மாதம் வெளியாகிறது.
Digiqole ad

விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள ” கள்ளபார்ட் ” படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.

என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா
இசை – நிவாஸ் K பிரசன்னா
பாடல்கள் – கங்கை அமரன், சரஸ்வதி மேனன்.
எடிட்டிங் – S. இளையராஜா
கலை – மாயா பாண்டி
ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்
மக்கள் தொடர்பு – மணவை புவன்.
தயாரிப்பு – S.பார்த்தி, S.சீனா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – P.ராஜபாண்டி. DF.Tech
படம் பற்றி இயக்குனர் P.ராஜபாண்டி கூறியதாவது….

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம்.

ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின் திரைக்கதை.
இதுவரை யாரும் தொடாத ஒரு கதைகளைதை இதில் பார்க்கலாம்

படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.அந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம்மே மாதம் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் P.ராஜபாண்டி.

Digiqole ad
Spread the love

Related post