ரிப்பீட் ஷூ விமர்சனம்

 ரிப்பீட் ஷூ விமர்சனம்

திலீபன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா ம்ற்றும் ப்ரியா கல்யாண் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “ரிப்பீட் ஷூ”.

கதைப்படி,

நாயகன் திலீபன் ஒரு டைம் ட்ராவலிங் ஷூவை தயாரிக்கிறார். அப்போது, கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதற்கு முன்னதாக ஷூ’வை ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டுச் செல்கிறார் திலீபன்.

மறைத்து வைத்திருந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளியான அந்தோணி தாசனின் மகளாக வரும் ப்ரியாவிடம் சிக்குகிறது. அங்கிருந்து, யோகிபாபுவின் கைக்கு செல்கிறது அந்த ஷூ.

ஷூ வந்த நேரம், யோகிபாபுவின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.

அதேவேளையில், 15 வயது வரை மதிக்கத்தக்க சிறுமிகளை கடத்தி அவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வரும் ஒரு கும்பலிடம் அந்தோணி தாசன் தனது மகள் ப்ரியாவையும் விற்று விடுகிறார் சிக்கி.

ப்ரியாவின் வாழ்க்கை என்னவானது.? கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டார்களா.? டைம் ட்ராவலர் ஷூ என்னவானது.? என்பதே மீதிக் கதை…

சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ள ஒரு கொடூரமான காட்சியமைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர். குழந்தைகளை கொடுமைப்படுத்தும் காட்சிகளை குறைத்து பாலியல் கொடுமைகளைக்கு எதிரான விழிப்புணர்வை கொடுக்கும் படமாக கொடுத்து சினிமா மூலம் சிறு விழிப்புணர்வு முயற்சி எடுக்கலாம்.

அதை தவிர்த்து, கொடுமைக் காட்சிகளை எடுத்து அதையும் காட்சிப்படுத்தி நம்மையும் பார்க்க வைத்து கொடுமை செய்கிறார் இயக்குனர்.

யோகிபாபு மற்றும் திலீபனின் காட்சிகள் பெரிதாகவும் இல்லை.

முழு படத்தையும் ஒரே ஆளாக சுமந்து சிறுமி ப்ரியா கல்யாண் தான். இவர் இயக்குனர் இயக்குனர் கல்யாண் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறு வயதில் வலுவான ஒரு கதாபாத்திரத்தை சுமந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தந்தையே மகளை பணத்திற்காக பாலியல் தொழிலுக்கு தள்ளுவது..?? இக்காட்சிகளையெல்லாம் தமிழ் இயக்குனர்கள் கொஞ்சம் தவிர்க்கலாமே..!

கிங்க்ஸ்லி மற்றும் KPY பாலா இருவரும் காமெடி தான் செய்கிறார்களா? கடுப்பேத்துகிறார்களா? என்று குழப்பமே எழும்.

படத்தின் திரைக்கதை சரியாக அமைத்திருந்தாலாவது படத்தை பார்க்கும் நமக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை சுமார் தான்.

ஷூ – தேய்ந்துவிட்டது – (2/5)

Related post