மீண்டும் இணையும் “96” படக்குழு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

 மீண்டும் இணையும் “96” படக்குழு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “96”. இப்படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒரு காதல் உயிரோட்டத்தை இப்படம் கொடுத்ததால் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இளைஞர்கள் பலரும் இப்படத்தை காவியமாக கொண்டாடினர். தமிழில் ஹிட் அடித்ததால் தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் பிரேம்குமாரே இயக்கினார். ஆனால், தமிழில் கொடுத்த ஹிட் அங்கு கிடைக்காமல் போனது.

இதனைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக இருந்த பிரேம்குமார், தனது கதையை விஜய் சேதுபதியிடம் கூறியிருக்கிறார்.

படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி மிகவும் பூரித்துப் போனாராம். எப்போது வேண்டுமானாலும் இப்படத்தை துவங்கலாம் என்று இயக்குனருக்கு கிரீன் சிக்னல்கொடுத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post