மாலை படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ராபர்ட் மாஸ்டர்

 மாலை படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ராபர்ட் மாஸ்டர்
Digiqole ad

ராபர்ட் மாஸ்டர்  ‘மாலை’ படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார்!

நடன இயக்குநர் ராபர்ட் மறுபிரவேசம் செய்யும் ‘மாலை’ படத்தின் தொடக்க விழா!

நடனத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சற்று இடைவெளிக்குப் பின் மறுபிரவேசமாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் ‘மாலை’.

இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று சென்னை ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது.

ராபர்ட் மாஸ்டர் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ராஜேஷ் ராஜா. இவர் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

இயக்குநர் ராஜேஷ் ராஜா அரை மணி நேரத்தில் சொன்ன கதை பிடித்துப்போய் படத்தில் நடிக்கச் சம்மதிக்கும் அளவிற்கு அவர் கதை சொல்லும் விதம் ராபர்ட் மாஸ்டருக்குப் பிடித்து இருந்ததாகக் கூறுகிறார்.
அதை மீண்டும் விரிவாகச் சொல்லக் கேட்டபோதும் அவ்வளவு தெளிவாகக் கதை சொன்னதால் உடனே நடிக்க சம்மதித்து விட்டார்.

இப்படத்தில் சங்கீதா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் அவர் சின்னச்சின்ன வேடங்களில் சில படங்களில் தலைகாட்டியவர் . மகாலட்சுமி என்கிற குழந்தை நட்சத்திரம் படத்தில் அறிமுகமாகிறது. மகாலட்சுமியின் நடிப்பாற்றலை இயக்குநர் சோதித்துப் பார்த்தபோது நடித்துக் காட்டிய விதம் இயக்குநரை வியக்கவைத்திருக்கிறது.

மேலும் பல அறிமுகமான முகங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை பாலகங்கா கிரியேஷன்ஸ் ஜி கே எம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் ‘மாலை’ படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும்.

Digiqole ad
Spread the love

Related post