ருத்ரன் படப்பிடிப்பு நிறைவு!

 ருத்ரன் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவின் பெரும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர், பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர்.

இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்திருக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படம் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

Related post