உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சபாபதி திரைப்படம்

 உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சபாபதி திரைப்படம்

உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சபாபதி திரைப்படம் – கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ~சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு மக்களால் அதிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இந்த ஞாயிறு ஜனவரி 9 அன்று கண்டு மகிழுங்கள் ~

சென்னை, ஜனவரி 4, 2022: தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, வரும் வார இறுதி நாட்களில் சபாபதி திரைப்படத்தை தொலைக்காட்சியில் உலகளவில் முதன்முறையாக ஒளிபரப்புவதன் மூலம் புத்தாண்டான 2022 – ஐ குதூகலமாக வரவேற்க தயாராகி வருகிறது. இந்த ஞாயிறு, ஜனவரி 9 ஆம் தேதி பிற்பகல் 1:00 மணி மற்றும் மாலை 4:00 மணி அளவில், 2021 ஆம் ஆண்டில் திரை ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்பை பெற்ற இத்திரைப்படத்தை கலர்ஸ் தமிழின் சண்டே சினி ஜம்போ நிகழ்வின் ஒரு அங்கமாக பார்த்து ரசிக்கலாம்.

புதுமுக இயக்குனரான ஆர். ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் மற்றும் ப்ரீத்தி வர்மா முதன்மை கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் சிறப்பான நகைச்சுவை திரைப்படம் இது. புகழ், எம்.எஸ். பாஸ்கர், சாயாஜி சிண்டு மற்றும் வம்சி கிருஷ்ணா ஆகிய பிரபல நடிகர்களின் பட்டாளமும் இத்திரைப்படத்தில் இருக்கிறது. திக்குவாய் பாதிப்பின் காரணமாக எல்லோராலும் கிண்டல் கேளிக்கு ஆளாகின்ற சபாபதி (சந்தானம்) என்ற கதாபாத்திரத்தை இக்கதை மையமாக கொண்டிருக்கிறது. என்னதான் சிறப்பாக முயற்சிகள் எடுத்தபோதிலும் கூட அவரது வாழ்க்கையை மாற்றுவதற்கான முயற்சிகள் ஒவ்வொரு நிலையிலும் சபாபதி தோல்வியையே சந்திக்க நேர்கிறது. இறுதியில் இவர் மீது கனிவும், பரிதாபமும் கொள்ளும் விதி, வியப்பூட்டும் சூழலில் கொண்டுபோய் நிறுத்துவதன் மூலம் இவரது வாழ்க்கையை மாற்ற முடிவு செய்கிறது. குறுக்குப்புத்தியும், மோசடி உணர்வும் கொண்ட ஒரு அரசியல்வாதி (சாயாஜி ஷிண்டே) ஒரு மிகப்பெரிய பணத்தொகையோடு இது தொடங்குகிறது. இந்த பணம் தான் இதன் மையமாக மாறுகிறது. இந்த குழப்பமான, சிக்கலான சூழலுக்கு மத்தியில் சாவித்திரி என்ற இளம் பெண்ணின் மீது (ப்ரீத்தி வர்மா) காதலில் விழுகிறார் சபாபதி. அவரது பக்கத்தில் விதி துணை நிற்க, சபாபதியின் காதல் இடையில் நிற்க இவரை துரத்திக்கொண்டு அரசியல்வாதி விடாமல் துரத்த, எதிர்வருகின்ற கடுமையான சவால்களை சமாளிக்க சபாபதியின் திறனும், முயற்சிகளும் தான் கதையின் எஞ்சிய பகுதியாக அமைகிறது.

இத்திரைப்படம் குறித்து பிரபல நடிகர் சந்தானம் பேசுகையில், “வாழ்க்கையின் உண்மைகளையும், யதார்த்தங்களையும் பிரதிபலிக்கின்ற நபர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சபாபதி திரைப்படம் நகைச்சுவை மீது ஒரு வித்தியாசமான, புத்துணர்ச்சியூட்டும் அணுகுமுறையாக இருக்கிறது. மாற்றுத்திறனாளியாக இருக்கின்ற மற்றும் சமுதாயத்தில் சமத்துவமான வாய்ப்பை நிலைநாட்ட முயற்சிக்கின்ற அனைத்து நபர்களின் பிரதிநிதியாக இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான சாட்டிலைட் உரிமைகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பெற்றிருப்பது எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமையன்று உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக இத்திரைப்படம் ஒளிபரப்பாவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். தங்களது வீட்டில் வசதியாக இருந்துகொண்டே இத்திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்து அனுபவிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

“முதன்முறையாக நான் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது. அதிவேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், சபாபதி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்காக இந்த சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் கூறினார். அவர் மேலும் பேசுகையில், “மிகப்பிரமாதமான நடிகரான சந்தானம் மற்றும் திறமைமிக்க பல நடிகர்களைக் கொண்டு எனது முதல் அறிமுகத் திரைப்படத்தை இயக்கியிருப்பது எனக்கு இன்னும் வியப்பையும், நம்ப இயலாத ஒரு வித்தியாசமான உணர்வையும் தருகிறது. வரும் வாரத்தில் ரசிகர்களும், பார்வையாளர்களும் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் குதூகலமான வாரஇறுதி நாட்களை இத்திரைப்படத்தின் மூலம் அனுபவிப்பார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்,”

ஜனவரி 9 – ம் தேதி இந்த ஞாயிறன்று மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த, அடக்கமுடியாத சிரிப்பை வரவழைக்கின்ற வார இறுதி கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 1.00 மணி முதல், 4.00 மணி வரை அற்புதமான இந்த நகைச்சுவை திரைப்படத்தை கண்டு ரசியுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.

Related post