அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “சாணிக் காயிதம்” திரைப்படம் மே 6 அன்று பிரைம் வீடியோவில் வெளியானது
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “சாணிக் காயிதம்” திரைப்படம் மே 6 அன்று பிரைம் வீடியோவில் வெளியானது…
ஒரு கதை என்பது மாயஜாலம் போன்றது அது பல தடைகளை தாண்டி தன்னை தானே உருவாக்கி கொள்ளும். இருப்பினும், ஒரு கதையிலிருந்து ஒரு ஆச்சர்ய தருணத்தை உருவாக்குவதே, ஒரு திரைப்பட இயக்குநரின் முக்கியமான பங்காகும் அதுவே கலையாகும், அவர் கதையை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். தனது முதல் படமான ‘ராக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மீண்டும் ஒரு கனகச்சிதமான கதைக்களத்துடன் திரும்பியுள்ளார். “சாணிக் காயிதம்” திரைப்படம் மே 6 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் 240 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது.
எந்த ஒரு திரைப்படம் உருவாகும் முன், அதை பற்றிய கருத்து தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சாணிக் காயிதம் பயணமும் ஒரு சிறு கருவுடன் தொடங்கியது, அது நான்கு நாட்களில் உருவாகியது. மனித இயல்பைப் பற்றிய அடிப்படை புரிதல்தான் இந்த படத்தின் முக்கிய சாராம்சம் ஆகும். பழிவாங்கும் கதைக்களமான ராக்கி திரைப்படத்தில் இருந்தே, அருண் மாதேஸ்வரன் பழிவாங்கும் கதையை மூன்று பகுதியாய் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார், அதன் தொடர்ச்சியாகவே அவர் இந்த சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறியதாவது….
“தமிழ்த் திரையுலகில் பழிவாங்கும் கதைகள் புதியதல்ல, ஏற்கனவே மில்லியன் கணக்கில் இந்த மாதிரி கதைகள் வந்துள்ளன. இருப்பினும், சாணிக்காயிதம் மற்றும் எனது முந்தைய படமான ராக்கியில் காட்டப்படும் யதார்த்தத்தின் அம்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஒருவகையில் புதியது. மற்ற படங்களில் காட்டப்படும் வன்முறை ஸ்டைலாக இருக்கும், அதிலிருந்து இந்த படம் மாறுபடும். சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நான் ஒரு வித்தியாசமான முயற்சியை கொண்டு வர விரும்பினேன், எழுத்து எனக்கு இயல்பாக வந்தது; தீவிரமான சூழ்நிலைகளில் ஒரு கதாபாத்திரம் எப்படி எதிர்வினையாற்றும் என்பது பற்றியது தான் இக்கதை. இருப்பினும், வன்முறையைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, படத்தில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
1980-களில் வெளியான பழைய பிரிட்டிஷ் படங்களான Get Carter மற்றும் Quentin Tarantino உடைய Kill Bill போன்ற படங்களின் பாதிப்பில் அருண் மாதேஸ்வரன், சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படங்களில் பாதிக்கபட்டவர்கள் எதிர்த்து போராடுவதின் கருவை அடிப்படையாக வைத்தே அருண், சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
“எனது முதல் படத்திலிருந்தே நான் சில இயக்குநர்களின் பாதையை பின் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, Jim Jarmusch உடைய படைப்புகள் எனக்கு பிடித்தமான ஒன்று. Seijun Suzuki மற்றும் Akira Kurosawa ஆகிய இரண்டு ஜப்பானிய திரைப்பட இயக்குனர்கள் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்து வருகின்றனர். ஒரு வகையில் பார்த்தால், நான் இவர்களுடைய படங்கள் மற்றும் இவர்களின் திரை நுணுக்கங்களைக் தமிழில் கொண்டு வர விரும்பினேன், அதனால் தான் சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டேன்,” என்கிறார் இயக்குநர்.
மேலும், Jim Jarmusch , Seijun Suzuki மற்றும் Akira Kurosawa போன்ற புகழ்பெற்ற திரைப்படத் இயக்குனர்கள் உடைய படத்தில் இருக்கும் அம்சங்கள் இந்த திரைப்படத்திலும் இருக்கும் அதை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம், இது பார்வையாளர்களுக்கு சுவாரஷ்யமான ஒன்றாக இருக்கும் என்றும் அருண் கூறுகிறார்.
அமேசான் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய வெளியீடாக “சாணிக் காயிதம்” ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது, திரையில் மாயாஜாலத்தை உருவாக்கும் அருண் மாதேஸ்வரனின் சினிமாவை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளிக்கலாம்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “சாணி காயிதம்” திரைப்படம், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. இந்த படம் தெலுங்கில் ‘சின்னி’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘சாணிக்காயிதம்’ என்ற பெயரிலும் வெளியாகியுள்ளது.