சந்தானத்தின் “குலுகுலு” படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

மேயாத மான் , ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார், அடுத்ததாக சந்தானத்தை வைத்து குலுகுலு என்ற திரைப்படத்தை உருவாகியிருக்கிறார்.
இப்படத்தை, சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்நிலையில், இப்போது இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.