சந்தானம் நடிக்கும் “குலுகுலு”; ஜுன் மாதம் திரைக்கு வருகிறது!!
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் அடுத்ததாக சந்தானத்தை வைத்து “குலுகுலு” என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘ லொள்ளு சபா’ மாறன், ‘லொள்ளு சபா’ சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் டைட்டிலும் போஸ்டரும் கவனத்தை ஈர்த்திருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் ஜுன் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.