ஏகே 62 படத்தில் சந்தோஷ் நாராயணன்!?

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு என்ற படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாகவும் மகிழ் திருமேனி அஜித்தின் 62வது படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படியாக இணையும் பட்சத்தில் அஜித்குமாரோடு முதல் முறையாக கைகோர்க்கவிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.