வசூலில் மிரட்டும் கார்த்தியின் “சர்தார்”!!

 வசூலில் மிரட்டும் கார்த்தியின் “சர்தார்”!!

இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தந்தை – மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் ” சர்தார்”.

விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பைப் பெற்ற இப்படம், அனைத்து திரையரங்குகளிலும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூலிலும் பெரும் சாதனை படைத்து வருகிறது சர்தார். கார்த்தியின் திரைப் பயணத்தில் ஹிட் அடித்த திரைப்படங்களில் சர்தார் முக்கியமான இடத்தை பிடித்து உள்ளது. அதாவது படம் வெளியாகி 3 நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூபாய் 14 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து சர்தார் படமும் ஹிட் அடித்துள்ளதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் கார்த்தி.

 

Related post